திடீரென கேட்கும் பயங்கர சத்தம்.. உயிருக்கே ஆபத்து..!
செங்கல்பட்டு பாறைகளுக்கிடையே வெடி வைக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வீரராகவபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று உள்ளது. இதில் பாறைகள் இருப்பதற்காக வெடிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அருகாமையில் உள்ள வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி வெடிகள் வைப்பதால் குழந்தைகளுடன் வயதான பெரியோர்கள் வரை அச்சமடைந்துள்ளனர் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீட்டின் சுவர்கள் சேதம் அடைந்துள்ளன என்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





