--- --:--:-- --

போட்டோ சூட்டுக்காக சென்ற இளைஞர் கொலை..!

6

விலை உயர்ந்த கேமராவிற்காக போட்டோகிராபரை திருமண நிகழ்ச்சி எடுப்பதாக கூறி வரவழைத்து கொலை செய்தவர்களை அவர்களுடைய பெண் தோழியின் முகநூலை பயன்படுத்தி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் 23 வயதான சாய் விஜய் பவன் கல்யாண். இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக ஆன்லைனில் போட்டோ சூட் செய்து கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் சண்முக தேஜா என்ற நபர் திருமணத்திற்காக 10 நாள் சூட் இருப்பதாக கூறி ஒரு அட்ரஸை கொடுத்து அங்கு வருமாறு சாய் விஜயை அழைத்துள்ளார்.

 

இதற்கு அடுத்த சாய் விஜய் ஃபோட்டோ ஷூட்டுக்கு தேவையான சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராவையும் அதற்கு தேவையான உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு தனது பெற்றோரிடம் கூறிவிட்டு ரயில் மூலம் ராஜமுந்திரி சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் அவரை அழைத்துச் செல்ல காரில் ஷண்முக தேஜாவும் அவரது நண்பரும் தயாராக இருந்து அங்கிருந்து ஆலநூர் அருகே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சந்தேகமடைந்த சாய் விஜய் whatsapp மூலம் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் தன்னை அழைத்து செல்வதாகவும் தனக்கு அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோருக்கு தெரிவித்துள்ளான்.

 

அதோடு ஒருவேளை தன்னை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் சண்முக தேஜாவின் செல் போன் எண்ணுக்கு காண்டாக்ட் செய்ய வேண்டும் என்றும் அத்தோடு காரின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்தும் அனுப்பியுள்ளார். இதனிடையே மூன்று நாட்களாகியும் மகனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் பயந்து போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாய் விஜய் மெசேஜை வைத்து சண்முக தேஜாவை தொடர்பு கொண்ட பொழுது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்த பொழுது கேமராவையும் பொருட்களையும் கைப்பற்றினார். இறுதியாக கேமராவிற்காக இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon