காதலனை கொடூரமாக கொலை செய்த காதலியின் தந்தை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மகளை காதலித்த இளைஞரை தந்தை கழுத்தை நெரித்துக் கொன்று சடலத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ராம் நகர் மாவட்டம் கும்பாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் குமார். 25 வயது இளைஞரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் பொம்மையா ஆகியோருடன் நண்பராக நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் நாகராஜின் மகளை தினமும் கல்லூரியிலிருந்து நாகேஷ் குமார் பைக்கில் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படும் நிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு நாகராஜிடம் நாகேஷ் குமார் தெரிவித்திருக்கிறார். நாகேஷ் குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாகராஜ் ஒரு கட்டத்தில் நாகேஷ் குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார்.
அதில் நண்பரான பொம்மையாவுடன் நாகேஷ் மது இருந்ததாலே நாகராஜ் அவரை கழுத்தை நெரித்துக் கொன்ற நிலையில் ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் சடலத்தை வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நாகராஜை கைது செய்த போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் பொம்மையாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





