குடிநீரில் துர்நாற்றம்.. தொட்டியை திறந்து பார்த்த போது அதிர்ச்சி..!
சேலத்தில் குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நாயின் உடலை அப்புறப்படுத்திவிட்டு அந்த குடிநீரை விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆட்டையான் பட்டம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
திடீரென குடிநீரில் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதி மக்கள் நீர் தேக்க தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் நாய்க்குட்டியின் உடல் மிகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாயின் உடலை வெளியே எடுத்து அப்புறப்படுத்தினார்.
தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த தண்ணீரையும் வெளியேற்றி தொட்டியை தூய்மைப்படுத்தினர். நாயை அடித்து குடிநீர் தொட்டியில் போட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





