--- --:--:-- --

வளைகாப்பு முடிந்து காரில் வீட்டுக்கு அழைத்து வந்த போது விபத்து..கர்ப்பிணி பலி..!

3

பெற்ற மகளுக்கு ஆசை ஆசையாய் சீமந்தம் நடத்தி அழகு பார்த்த சில நிமிடங்களிலேயே மகளை சடலமாக பார்க்கும் துரதிஷ்டவசமான நிலைமை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது.

 

நாமக்கலை அடுத்த பகுதியைச் சேர்ந்த பாபுசாமி, மகள் பவித்ரா என்பவருக்கும் சேர மாவட்டம் தம்மம்பட்டி கொண்டையம்பள்ளியை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியான பவித்ராவுக்கு கணவர் வீட்டில் வைத்து பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் சீரும் சிறப்புமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இன்னும் ஒரு மாதத்தில் தாத்தா பாட்டி ஆகப் போகிறோம் என்ற பெரு மகிழ்ச்சியில் இருந்த பவித்ராவின் பெற்றோர் வளைகாப்பு முடிந்த கையோடு மகளை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து பவித்ராவை அழைத்துக் கொண்டு தந்தை பாலுசாமி உறவினர் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

 

பாலுசாமி ஓட்டி வாகனம் சேந்தமங்கலம் அடுத்த திருமலை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென சரட்டு மேனிக்கு புழுதி பறக்க சென்ற ஆம்னி கார் சாலையோரமாக நிறுத்திக் கொண்டே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது சடார் என மோதி விபத்திற்கு உள்ளானது.

 

இதில் விரல் சுடக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கோர விபத்தில் வாகனத்தில் பயணித்து ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நிறைமாத பெண் பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon