இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்.. விபரீதத்தில் முடிவு..!

துரையில் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த பொழுது எடுத்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

அருண் குமார் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு அறிமுகமான இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்தனர்.

 

இதை கேள்விப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறவே அருண்குமார் தாங்கள் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அருண்குமார் கைது செய்யப்பட்டார்.