அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா கைது..!
படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற கோஷத்துடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். தன்னை சார்ந்திருக்கும் கட்சி ஆட்சி பொறுப்பில் ஏற்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சகோதரர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பி வருகிறார்.
ஷர்மிளா அரசியல், ஆட்சி, அதிகாரம் ஆகிய காரணங்களுக்காக அண்ணன் தங்கைக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டி அண்ணன் ஆட்சியில் தங்கை மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை ஆகியவை மாநில எல்லைகளுக்கு அப்பால் பேசும் பொருளாக மாறி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





