திருட்டு வழக்கு போட்டு அவமானப்படுத்தாதீங்க என போலீசாரிடம் கூறிய திருடன்..!
சேலத்தில் கும்பலாக வந்து செல்போனை திருடிவிட்டு மதுபோதையில் சிக்கிய நபர் போலீசாரை படாத பாடுபடுத்தினார். ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சேலத்தில் கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது பின்னல் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வேகமாக கீழே தள்ளிவிட்டு செல்போனை பறித்து சென்றது. இதில் ஒருவர் மட்டும் மது போதையில் இருந்ததால் தடுமாறிக்கொண்டே நடந்து சென்றுள்ளார்.
அவரை பின்தொடர்ந்து வந்த ராஜா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொழுது போதை ரவுடியை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் – திருச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பதும் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
தன் மீது கொலை வழக்கு போடுங்கள் இதுபோன்ற சிறிய செல்போன் திருட்டு வழக்குகள் போட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போலீசாரை படாத பாடுபடுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





