--- --:--:-- --

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் ஒரு லட்சம் போட்டால் பணமழை எனக்கூறி மோசடி..!

5

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் மாதா மாதம் கமிஷன் என நண்பனுக்கு ஆசை வார்த்தை கூறி 60,000 கோடி ரூபாய் ஏமாற்றிய கில்லாடி நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

முகமது அமீர் அவரிடம் கல்லூரி நண்பரான நண்பர் விஜயும். சுந்தரமூர்த்தி என்பவரும் வெளிநாடுகளில் ஆன்லைன் டிரேடிங் குறித்து பேசியுள்ளனர். அப்பொழுது லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 4000 ரூபாய் தருவதாகவும் ஒரு வருடத்தில் முழு தொகையும் திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

 

அதனை நம்பிய முகமது அமீர் தன்னுடைய நண்பர்கள் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்துள்ளார். தமிழக முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் சேர்ந்த நிலையில் 65 கோடியே 98 லட்சம் ரூபாயை விஜய் மற்றும் சுந்தரமூர்த்தி பெற்று மோசடி செய்துள்ளனர்.

 

புகாரின் அடிப்படையில் விஜயை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon