--- --:--:-- --

ரயில்வே டிராக்கில் கிடந்த மண்டையோடு..ரயிலை கவிழ்க்க சதி..!

2

நாகர்கோவில் அருகே பாறாங்கற்கள் மற்றும் இறந்த மாட்டு தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் அருகே சென்ற பொழுது தண்டவாளத்தில் அடுத்தடுத்து பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்துள்ளார். ரயில் வேகம் குறைக்கப்பட்ட நிலையில் வலது சக்கரம் பாறையின் மீது மோதி உள்ளது.

 

தொடர்ந்து பார்வதிபுரம் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு சம்பவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. பாறாங்கல், இறந்த மாட்டின் மண்டை ஓடு மற்றும் எலும்பு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

 

சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு சதி திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து ரயில்வே மற்றும் வடசேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon