மனைவிக்கு நாற்காலி கொடுத்துவிட்டு கணவர் உயிரிழந்த சம்பவம்..!
விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 சக்கர நாற்காலி கேட்ட நிலையில், நாற்காலி பற்றாக்குறையால் அவர்களுக்கு 1 சர்க்கரை நாற்காலி மட்டுமே கிடைத்தது.
இதன் காரணமாக தனது மனைவியை சக்கர நாற்காலியில் அமர வைத்து முதியவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவர்கள் பரிசோதித்த பொழுது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





