தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்களுக்கு தமிழக அரசு அடிக்கல்..!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட உள்ள இரண்டு மண்டபங்களுக்கு அமைச்சர்கள் ராஜக்கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவரும் அடிக்கல் நாட்டினர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பில் இரண்டு நிரந்தர மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் கட்டப்பட உள்ளது.
இந்த மண்டபங்களின் கட்டுமான பணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





