--- --:--:-- --

கூடைப்பந்து பயிற்சியின் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 6ம் வகுப்பு மாணவர்..!

2

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த 6ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் சாலையைச் சேர்ந்த மருத்துவர் சுந்தரம் மற்றும் கீதாப்பிரியா தம்பதியினரின் மகன் ரியா.

 

பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடை பந்து பயிற்சியும் பெற்று வந்தார். இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது மைதானத்தில் உள்ள இரும்பு கம்பியை தொட்ட பொழுது அதில் இருந்த மின்சாரம் தாக்கி மயக்கமானவர் உடனடியாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon