--- --:--:-- --

பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞரை செருப்பால் அடித்த பெண்..!

2

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மேற்கு கிரி வீதி வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் தேங்காய் மற்றும் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இவர் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். மேலும் உனக்கு அம்மா கூட பிறந்தவர்கள் எல்லாம் இருக்காங்கல்ல இப்படி எல்லாம் தடவுவியா என்று காலில் போட்டிருந்த செருப்பை கழற்றி அந்த நபரை அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

 

இந்த நிலையில் புகார் ஏதும் கொடுக்காத நிலையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்யாமல் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon