வகுப்பறையிலேயே தூங்கும் தலைமை ஆசிரியை.. மாணவர்கள் எடுத்த முடிவு..!
சென்னை அடுத்த பூந்தமல்லி வட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சி பாப்பான் சத்திரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையை மாற்ற கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் கணக்கு பாடத்தை சரியாக எடுப்பதில்லை எனவும் அடிக்கடி விடுப்பு எடுத்து வருவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் வகுப்பிலேயே தூங்கி வழியும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





