--- --:--:-- --

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி..!

3

கர்நாடகாவில் இருந்து ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறு விழுந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தட்சிண கனடா மாவட்டத்தில் உள்ள வண்டிவால் என்ற இடத்தில் பயணிகளோடு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து 66 வயதான ராதா என்ற பெண் பயணி தவறி கீழே விழுந்துள்ளார்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு இடம் கொடுத்துவிட்டு நின்று இருந்த ராதா தவறி விழுந்ததாக தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பாக பேருந்து கேமரா காட்சிகள் தற்பொழுது வரலாகி வருகிறது. விபத்து குறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon