--- --:--:-- --

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுழன்று வரும் இந்த நேரத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

 

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள மடலில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டில் இருந்தாலும் தனது நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில் தான் உள்ளதென்று தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணம் காரணமாக அண்ணாவின் நினைவுநாளான இன்று நடக்கும் அமைதி பேரணியில் தன்னால் பங்கேற்க இயலாத நிலை உள்ளதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் திமுக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு புறம், அவதூறுகளை பரப்புவதில் பாஜகவும் அதிமுகவும் சளைத்தவை அல்ல என்றும்,பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே பாஜகவின் பத்தாண்டு கால சாதனை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் பாஜக தாக்கல் செய்த இடைக்காலப் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர், முழுமையான பட்ஜெட்டை அடுத்த கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon