--- --:--:-- --

ரூ. 1.46 கோடி செலவு செய்து உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்த வாலிபர்..!

13

உயரத்தை அதிகரிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர்.

 

இவர் அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை இரண்டு அங்குலம் உயர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு வலி அதிகரித்துள்ளதாகவும் தூக்கமின்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

தற்போது ஏற்பட்டுள்ள வலியை போக்குவதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon