--- --:--:-- --

நீட் தேர்வுக்காக வாங்கப்பட்ட கையெழுத்து அட்டைகள் சாலை வரை சிதறி கிடந்ததால் பரபரப்பு..

5

நீட் தேர்வுக்கு எதிராக வாங்கப்பட்ட கையெழுத்து அட்டையில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வெளியில் மக்கள் நடக்கும் பாதையில் சிதறி கிடந்தனர். மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் 50 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

 

கையெழுத்து பெறப்பட்ட அட்டைகள் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கையெழுத்து அட்டைகள் மாநாடுகள் முழுவதும் குப்பைகளாக சிதறி கிடந்தனர். அதன் மீது பொதுமக்கள் மிதித்து நடந்து சென்றனர். குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக புறப்பட்ட நீட் தேர்வு அட்டைகள் குப்பைகளாக சாலையில் கிடந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon