ஜக்கம்மாள் கோயில் திருவிழா.. பக்தர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை..!
உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜக்கம்மாள் கோயில் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோயில் உள்ளது. தை மாதத்தின் இரண்டாம் நாளில் இந்த கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்படும்.
இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அதன்படி நடப்பாண்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது பழம் தட்டுடன் வந்த ஆண்கள் ஜக்கம்மாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகளையும் மேளதாளத்துடன் அழைத்து வந்த பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





