--- --:--:-- --

ரயிலில் கால் வைத்ததும் தூக்கி வீசப்பட்ட சிறுவன்..!

3

சேலத்தில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஏறிய 13 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் கொங்கணாபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளான். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த ஊர் சங்ககிரிக்கு வந்த சிறுவன் சங்ககிரி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏறிய போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

படுகாயமடைந்த சிறுவனை ரயில்வே ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon