சாலையில் எதிரெதிரே வந்த பேருந்துகள் செல்ல முடியாமல் சிக்கித் தவிப்பு..!
மானாமதுரை சர்வீஸ் சாலையில் இரண்டு பேருந்துகள் எதிரெதிரே செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சிவகங்கை மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் லாட்ஜ் உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் வாகனங்களை எடுத்துச் செல்வதால் பேருந்துகள் செல்ல சிரமமாக இருப்பதாக புகார் வந்தன.
இந்த நிலையில் நேருக்கு நேர் சென்ற பேருந்து சிக்கி மாட்டிக்கொண்டன. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





