--- --:--:-- --

மாணவருக்கு சிறுநீர் கலந்த குளிர்பானத்தை கொடுத்த சக மாணவர்கள்..!

5

திருச்சி தேசிய சட்ட பள்ளியில் பயிலும் மாணவருக்கு சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்ததாக புகார் எழுந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய சட்டப்பல்கலை.யில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவர் ஒருவருக்கு அவரது வகுப்பு தோழர்கள் இருவர் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

மறுநாள் நடந்தது அறிந்த அந்த மாணவர் பதிவாளரிடம் வாய்மொழியாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மூன்று உதவி பேராசிரியர்கள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை வரும் 18ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் திடீரென புகாரை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.

 

சக மாணவர்கள் மிரட்டியதால் அந்த மாணவர் புகாரை திரும்ப பெற்றாரா? அல்லது பொய்யான புகார் அளித்தாரா என்பது குறித்து விசாரணைக்கு பிறகு தெரியவரும் என சட்டப்படி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon