இந்தோனேசியாவில் 2 ரயில்கள் மோதி விபத்து..!
இந்தோனேஷியாவில் 2 ரயில்கள் மோதி விபத்திற்கு உள்ளானதில் ரயில்வே பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு மாகாணத்தில் உள்ள சிவலிங்கா பகுதியில் ஆறு மணியளவில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
இதில் ரயில் நொறுங்கிய நிலையில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு வயல்வெளியில் விழுந்தன. இந்த விபத்தில் ரயில்வே பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
42 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





