--- --:--:-- --

ஸ்விகி, சொமாட்டோ ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

11

மிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஓலா, உபெர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை கார், பைக் டாக்சி ஆகியவற்றை இயக்கி வருகின்றனர். அதேபோல ஸ்விகி, செமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

 

ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவை மூலமாக மளிகை மற்றும் இன்னும் பிற பொருட்களின் டெலிவரி நடைபெறுகிறது.பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு பணியிட பாதுகாப்போ, பணி நிரந்தரமோ கிடையாது.

 

இதுபோன்ற பணிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தன. இதனை கருத்தில் கொண்டு கடந்த சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர், ஓலா, உபெர், ஸ்விகி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதை காணலாம் என்றும், நேரத்தின் அருமை கருதி பணியாற்றும் அதுபோன்ற பணியாளர்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

 

அவர்களின் ஒட்டுமொத்த நலன்கருதி நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில், உணவு டெலிவரி, மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்பட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon