அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தை வரும் 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராமர் சிலையை கோவில் கருவறைக்கு எடுத்து வர உள்ளார்.
இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாடு பிரதிநிதிகள், சாமியார்கள், மடாதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து மக்கள் தரிசனத்துக்காக ராமர் கோவிலுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதற்கிடையே தான் இன்று அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில்வே சந்திப்பு என அந்த ரயில் நிலையத்துக்கு பெயர் இருந்த நிலையில் தற்போது அது அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அதாவது Ayodhya Dham என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. தற்போது அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அயோத்தி சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயரும் அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




