--- --:--:-- --

நீட் தேர்வு எழுதாமலேயே எம்.பி.பி.எஸ் சீட் மகளுக்காக 16 லட்சத்தை அள்ளிக் கொடுத்த தாய்..!

9

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நீட் தேர்வு எழுதாமலேயே எம்பிபிஎஸ் சீட் பெற்று தருவதாக கூறி பதினாறு லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

 

ஜோலார்பேட்டையை அடுத்த பாய்ச்சல் கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா. இவர் தன் மகனை மருத்துவராகுவதற்காக நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க முடிவெடுத்ததாகவும் அப்பொழுது நீட் தேர்வு எழுதாமலேயே எம்பிபிஎஸ் சீட் பெற்று தருவதாக கூறி சிலர் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

அதற்காக பல தவணைகளாக சுமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை அந்த கும்பலிடம் கல்பனா கொடுத்த நிலையில் தொடர்ந்து சீட் பெற்று தராமல் இழுத்து அடித்து வந்ததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். தொடர்ந்து பணத்தை திருப்பி தர கோரியபோது 40,000 ரூபாய் மட்டுமே கொடுத்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் கல்பனா போலீசில் புகார் அளித்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மோனிகா மற்றும் இருவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் இருவரை தேடி வருகின்றனர்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon