பைக் மீது கார் மோதி அதி பயங்கர விபத்து..!
வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்த நிலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு காரில் தப்பிய வரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வண்டலூர் மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கூடுவாஞ்சேரி விஸ்வலிங்கபுரத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் அவரது மகள் கிருத்திகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்தி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





