உலகம் முழுவதும் முடங்கிய எக்ஸ் தளம்..!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரபல வலைதளமான எக்ஸ் வலைத்தளம் முடங்கியதால் நெட்டிசன்கள் கவலை அடைந்தனர்.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் வலைதளத்தில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 11 மணி முதல் எக்ஸ் வலைதளம் முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் சமூக வலைதளம் முடங்கியுள்ளது. ஆனால் பதிவுகளை பார்க்க முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய எக்ஸ் தளம் ஒரு மணி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் நிம்மதி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





