யுபிஎஸ்சி தேர்வு மனிதநேய அறக்கட்டளையில் இலவச பயிற்சி சைதை துரைசாமி அறிவிப்பு..!
2023 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் சைதை துரைசாமி மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வி இடத்தில் பயின்ற 41 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 25 ஆம் ஆண்டு மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயின்ற மாணவர்கள் மற்றும் 21 மாணவிகள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையடுத்து முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாதிரி நேர்முக தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் 9ம் தேதி முதல் சென்னை சிஐடி நகரில் உள்ள மனிதநேயம் கட்டணம் இல்லா பயிற்சி மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என மனிதனை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





