மலைப்பாதையில் ஏற்பட்ட கடும் பனிமூட்டம்.. ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலை பாதையில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் தமிழகம் கர்நாடகா இடையே சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் ஏற்பட்டது.
இதனையடுத்து மழை பாதையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போக்குவரத்து போலீசார் வாகனங்களை சீர்படுத்தினர். பனிமூட்டம் சற்று குறைந்த பிறகு வாகனங்கள் செல்ல தொடங்கின.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





