பஸ்சுக்குள் புகுந்து டிரைவரை தாக்கிய இளைஞர்..!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தீர்க்கங்கலம் என்ற இடத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகம் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது, ஜெயக்குமார் என்பவர் அந்த பேருந்தை ஓட்டி சென்றார்.

 

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் மனைவி குழந்தையுடன் வந்த இளைஞர் ஒருவர் இடது பக்கத்தில் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். பின்னர் பஸ்ஸில் ஏறி டிரைவரை கடுமையாக தாக்கினார்.

 

பேருந்து தாறுமாறாக ஓட்டுவதாக கூறி டிரைவரை அடித்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.