விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மகன் சண்முகபாண்டியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

 

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார் என அவரது மகன் சண்முகபாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.