வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!

ங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல். இது சென்னையில் இருந்து 310 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன காரணமாக தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.