ஒரு நாய் போட்டோ கூட போட விடமாட்றாங்க- புலம்பும் பிக்பாஸ் புகழ் பிரதீப்

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் எந்த சீசனிலும் நடக்காத விஷயங்கள் அதிரடியாக நடந்து வருகின்றன.

 

வாரா வாரம் 2 எலிமினேஷன்கள், 50 நாட்கள் முன்பே வைல்ட் கார்ட்டு என்ட்ரி என அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் நடக்கின்றன. அடுத்து பிக்பாஸ் என்ன அதிரடி டாஸ்க், மாற்றங்கள் கொடுக்கப்போகிறார் என தெரியவில்லை. அண்மையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ரெட் கார்ட்டு வாங்கி வெளியேறிய பிரதீப் ஒரு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஜோ ஜோ என எழுதியுள்ளார்.

 

அதைப்பார்த்த ரசிகர்கள், ஜோவிகாவை தான் அவர் ஜோ ஜோ என பதிவு செய்துள்ளார் என்றும் வீட்டில் அடிக்கடி தூங்குவதால் நாய் குறைப்பதை தான் அவர் இப்படி பதிவு செய்துள்ளார் என ரசிகர்கள் தங்களுக்கு தோன்றியதை கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதைப்பார்த்த பிரதீப், ஒரு நாய் புகைப்படத்தை கூட பதிவு செய்ய விடமாட்றாங்க என மீண்டும் பதிவிட்டுள்ளார்.