காதல் மனைவியை கொலை செய்த கணவன்..!
பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காதல் கணவனை, இளம்பெண் கண்டித்தால் கொலை செய்யப்பட்டார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிக் மற்றும் பவுசியா. இருபது வயதே நிரம்பிய இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
பவுசியா குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள ஒரு மகளிர் தங்கும் விடுதியில் தங்கி, பாலாஜி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் பவுசியா திடீரென மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.
கேரளாவில் இருந்து வந்த காதலன் ஆசிக், பவுசியாவை சந்தித்து பேசிவந்த நிலையில், குரோம்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தனர். மாலை 4 மணி அளவில் ஆசிக்கின் செல்போன் ஸ்டேட்டஸில் தனது காதலியை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக, ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
இதனைப் பார்த்த பவுசியாவுடன் படிக்கும் சக மாணவிகள் குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மாணவி பவுசியா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
பவுசியா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காதலன் ஆசிக்கை பல்லாவரம் அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




