--- --:--:-- --

இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக மோசடி.. இருவர் கைது..!

6

சென்னை மதுரவாயில் அருகே தனியார் நிறுவனரிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரவாயில் அருகே வினோத் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

இவரிடம் நட்பாக பழகிய சுகுமார் மற்றும் ஜானகிராமன் இருவரும் சேர்ந்து தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு எடுத்து தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.

 

ஆனால் கழிவு பொருட்களை பல மாதங்களாக எடுத்து தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஜானகிராமன் பாஜகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon