--- --:--:-- --

டிக்கெட் வாங்க சொன்ன நடத்துனர், ஓட்டுனர்.. பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் தாக்குதல்..!

7

உடுமலைப்பேட்டை அருகே பயணச்சீட்டு வாங்க சொன்னதால் மதுபோதையில் அரசு பேருந்து மீது கற்களை வீசிய இளைஞர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

தேவனூர் புதூர் அருகே மூன்று இளைஞர்களை டிக்கெட் எடுக்காததால் நடத்தினர் கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து கற்களை வீசியதாக கூறப்படுகிறது.

 

இதில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்து னர் காயம் அடைந்ததாக தெரிகிறது. கற்களை வீசியவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் எஞ்சிய இரண்டு பேரை பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon