--- --:--:-- --

உருளைக்கிழங்கை காட்டி 3,000 கோடி மோசடி..!

4

கிருஷ்ணகிரியில் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனம் நாற்பதாயிரம் பேரிடம் 3,000 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

 

இந்த நிறுவனம் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இதன்படி முதல் 10 மாதங்கள் பங்குதாரர்களுக்கு பணமும் வழங்கப்பட்டன. இதனையடுத்து கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் சுமார் 40,000 பேரிடம் இருந்து 3000 கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற பொருளாதார வெற்றியை காரணம் காட்டி அந்த நிறுவனம் பங்குதாரர்களுக்கு பணம் வழங்காமல் இருந்தது. தற்பொழுது யூனிட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் அனைவரும் தலைமறைவு ஆகியுள்ளனர்.

 

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி ஆட்சியரிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடமும் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon