--- --:--:-- --

தீபாவளியன்று குளிக்க சென்ற இடத்தில் நடந்த விபரீதம்..!

5

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அணையில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் சகதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன்.

 

அதே பகுதியை சேர்ந்த சுகாசினியை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தான். தீபாவளியன்று வீட்டிற்கு வந்த சுகாசினியின் தம்பியான எட்டாம் வகுப்பு மாணவன் ஹரிபிரசாத்தை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பாப்பாறு என்ற ஆற்றில் தமிழரசன் குளிக்க சென்றுள்ளார்.

 

இருவரும் சற்று ஆழமான பகுதிக்கு சென்ற பொழுது சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மைத்துனர்கள் இருவரும் தீபாவளியன்று உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon