தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்.. அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு..!
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் தொடர்பாக விவாதிக்க அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் அண்டை நாடுகளுக்கும் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வரும் 11ஆம் தேதி அரபு லீக் எனப்படும் அரபு நாடுகளின் அவசர கூட்டத்தை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.
இதில் நடத்தும் போர் குறித்தும் காசாவில் மனிதாபிமான உதவிகள் செய்வது குறித்தும் பேசப்படும் என தெரிகிறது. காசாவில் இருந்து அகதிகள் ஆக மக்கள் வெளியேறினால் அவர்களுக்கு தஞ்சம் தருவது குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.
ஈரான் ஆதரவு படைகள் போரில் இறங்கியுள்ளதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





