--- --:--:-- --

இன்று முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!

8

தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் 2022 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பட்டப்படிப்பு மற்றும் பி எட் முடித்திருக்க வேண்டும் என்றும் டெட் எனப்படும் ஆசிரியர் தேர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் இதில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon