கலைஞர் நூற்றாண்டு நூலகம் – அமைச்சர் அன்பில் மகேஷ் ட்வீட்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரை 2 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது என்றும் இதுவரை இந்த நூலகத்திற்கு 2 லட்சத்து 41,311 வாசகர்கள், மக்கள், மாணவர்கள் வருகை தந்து பயனடைந்துள்ளனர் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





