--- --:--:-- --

பைக்கை வளைத்து வளைத்து ஓட்டி இடையூறு செய்த நபர்..!

5

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு அருகே சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரின் வீடியோ பரவி வருகிறது.

 

பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வழித்தடத்தில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் வலது புறத்தில் இருந்து இடதுபுறம் மற்றும் இடது புறத்திலிருந்து வலது புறம் என்று வாகனத்தை வளைத்து வளைத்து ஓட்டிச் சென்றுள்ளார்.

 

இதனால் அந்த வழியில் சென்ற அரசு பேருந்து மட்டும் இல்லாமல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் அவர் இவ்வாறு வாகனத்தை இயக்கியதால் பிற வாகன ஓட்டிகள் முன்னேறிச் செல்ல முடியாமல் தங்கி சென்றனர்.

 

இதனை பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon