கஸ்டமர் காரை வாங்கி ஹோட்டல் ஊழியர் ஏற்படுத்திய விபத்து..!
சென்னையில் வாடிக்கையாளரின் காரை உணவக ஊழியர் கண்மூடித்தனமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போயஸ் தோட்டம் கஸ்தூரி இல்லம் பகுதியில் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். அப்பொழுது பார்க்கிங் செய்வதாக கூறி காரைப் பெற்ற உணவக ஊழியர் அதனை அதிவேகமாக இயக்கியதாக தெரிகிறது.
அப்பொழுது அந்த கார் சாலையில் சென்ற மற்றொரு வாகனத்தின் மீதும், தடுப்பு சுவரிலும் மோதி நொறுங்கி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிய உணவக ஊழியர் காளிராஜ் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான காரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





