நெல்லையில் கந்துவட்டி தொல்லை அதிகரிப்பு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்..!
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கந்துவட்டி கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேருந்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தால் செயல் பட்டு வரும் கந்துவட்டி கொடுமைகளை தடுக்க வேண்டும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியவர்கள் கடனால் தற்கொலைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற பெண்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் நெல்லையில் கந்துவட்டி தொகை அதிகரித்திருப்பதாகவும் காவல்துறையினர் அவர்களுக்கு துணை நிற்பதாகவும் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





