--- --:--:-- --

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!

2

மிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் கூறியுள்ளது.

 

நாளை டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் 2 மற்றும் 3ம் நாட்களில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என கணிக்கப்பட்டு இருப்பதால் அந்நாட்களில் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon