--- --:--:-- --

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை விளக்கம்..!

1

ருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உடல் பரிசோதனைகளுக்கு பின் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு பொதுமக்களை சந்தித்த பொழுது அமைச்சருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனையும் இதயத்தில் அடைப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon