அனாதையாக சாலையில் விடப்பட்ட இரண்டு சிறுமிகள்..!
காஞ்சிபுரம் பகுதியில் தனித்து விடப்பட்டு அலைந்து கொண்டிருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலை பகுதியில் சுமார் நான்கு வயது மற்றும் இரண்டு வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் தனியாக நின்று அழுது கொண்டிருந்துள்ளனர்.
இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் இரண்டு சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு உணவளித்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





