--- --:--:-- --

கடலில் தத்தளித்த இரண்டு இளைஞர்களை துரிதமாக மீட்ட காவலர்கள்..!

5

ஆந்திராவில் கடலில் தத்தளித்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். பாபட்டிலா மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

 

உடனடியாக அங்கு பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படை வீரர் கடலில் தத்தளித்த இளைஞர்களை பத்திரமாக மீட்டு கடற்கரை கொண்டு வந்தனர். இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon